முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் பாராட்டு

புதன்கிழமை, 1 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அமராவதி : தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஜனசேனா தலைவரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள்,

உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.

உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து