முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் நடிகர் மாரடைப்பால் மரணம்

வியாழக்கிழமை, 2 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 40.

இந்தி பிக் பாஸ் 13-வது சீசன் நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டம் வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா,2 சினிமா படங்களில் நடித்துள்ளார். அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மரணமடைந்தார். சித்தார்த் சுக்லாவுக்கு தாயும், இரு சகோதரிகளும் உள்ளனர். 

2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2014-ல் பாலிவுட்டில் அறிமுகமானார்.  சித்தார்த் சுக்லாவின் மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து