முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை: அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

வியாழக்கிழமை, 2 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதியில்லை என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். 

வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை  சார்பில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த 143 பேருக்கு ₹31 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு இயந்திர இரு சக்கர வாகனம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை கலெக்டர் விஜயராணி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:

சென்னை மாவட்டம்  சார்பில் 3-வது முறையாக நலத்திட்ட உதவிகள்  வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் மனு கொடுத்து காத்திருந்தவர்களுக்கு தற்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு நலத்திட்டங்கள் தகுதி உள்ளவர்களுக்கு தாமதமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த இடங்களை சமூக விரோதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்த முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக  பரவிவரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  மனித உயிர்கள் முக்கியமானது என்பதை கருதியே விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   இன்றைய சூழலில்  இந்து சமய அறநிலையத்துறையின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து