முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தை மகன் பாசத்தை சொல்லும் ஆறா

சனிக்கிழமை, 4 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

பகைமையை சொல்லி வளர்க்காமல் பாசத்தை ஊட்டி பிள்ளைகளை வளருங்கள் என்ற கருத்தையும்,  தந்தை மகனுக்கும் உள்ள பாசப்போராட்டத்தையும் வலியுறுத்தும் படம் ஆறா. பரத் பவி மூவீஸ்  தயாரித்திருக்கும் இப்படத்தில் பரத் கதாநாயகனாகவும், கேரள வரவு பவித்ரா கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளனர்.

டிக் டாக் பிரபலங்களான சாதனா, ரமேஷ், ஸ்கெட்ச் கார்த்திக், பிரியங்கா ஆகியோருடன் சுரேஷ், ஜெயஸ்ரீ, முத்துசாமி, சையது,கலை போன்ற வளர்ந்து வரும் திரை நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர். இசை - ஸ்பர்ஜன் பால்,  பாடல்கள் - மணியமுதன், முத்து வெங்கட், ,வெற்றி, நடனம்-ஜாய் மதி,  ஸ்டண்ட் - மிரட்டல் செல்வா, தயாரிப்பு - பகவதி, கதை  திரைக்கதை  வசனம் மற்றும்  ஒளிப்பதிவுடன் படத்தை இயக்கியுள்ளார்

வெற்றிவேல் சாரங்கபாணி. படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சாத்தூர், விருதுநகர், ஓடப்பட்டி, இருக்கன்குடி, ஏழாயிரம் பண்ணை போன்ற இடங்களில் 40 நாட்களில் ஒரேக்கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்து தற்போது இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து