முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரையரங்கில் வெளியாகும் அரண்மனை-3

சனிக்கிழமை, 4 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அரண்மனை3 படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும்  என்று கூறியிருக்கிறார் சுந்தர் சி. இந்நிலையில் படத்தை பார்த்த சில முக்கியஸ்தர்கள் இப்படம் குடும்பத்தோடு திரையங்கில் கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம்,

இதனை திரைக்கு கோண்டு வாருங்கள் என்றனர். இதனை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி.  அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு பாகங்களை குழந்தைகள் கொண்டாடிய நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத்,  மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி- யுடன் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன்-ம் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து