Idhayam Matrimony

பிசாசு 2 படப்பிடிப்பு நிறைவு

சனிக்கிழமை, 4 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் T.முருகானந்தம்  தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை மிஷ்கின் இயக்கி வருகின்றார்.

கதையின் நாயகியாக ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.  திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற ‘பிசாசு 2’ படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இதனையடுத்து இயக்குனர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கு தனது நன்றியையும் வாழ்த்துக்களை கூறியுள்ளார். படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 திரையரங்குகளில் ‘பிசாசு 2’ வெளியாகும் என்று கூறிய தயாரிப்பாளர், விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து