பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

Ban-Modi 2021 09 07

Source: provided

புது டெல்லி : டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று  பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை கவர்னர் பன்வாரிலால் சந்தித்து பேசினார். இதையடுத்து நேற்று மாலை பிரதமர் மோடியை பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். 

பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களுக்கு கூடுதல் பொறுப்பு கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், மாநில அரசு முன்வைத்துள்ள கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமரிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து