இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அமெரிக்க உளவுத்துறை தலைவர் சந்திப்பு

Ajith-Doval 2021 09 08

Source: provided

புது டெல்லி : டெல்லி வந்துள்ள அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. தலைவர் வில்லியம் பர்ன்ஸ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தினார். ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமையவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய சூழ்நிலையில் பாதுகாப்பு விவகாரங்கள், இந்த சந்திப்பில் முக்கியமான ஆலோசனை நடத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது. ஆப்கன் மண்ணை பயங்கரவாதிகளின் புகலிடமாக பயன்படுத்த தலிபான்கள் அனுமதிக்கக் கூடாது என இந்தியா தெரிவித்திருந்தது. இது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அஜித் தோவல், ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலய் பத்ருஷேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆப்கன் அரசியல் சூழ்நிலை, சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்தும்,ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து