ஜனாதிபதியுடன் கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

Ban-Ram 2021 09 08

Source: provided

புது டெல்லி : ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்தித்து பேசினார். 

தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் மாநில கவர்னர்  பொறுப்பும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமான சண்டிகரின் நிர்வாகப் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள கவர்னர்  பன்வாரிலால் புரோகித், அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று ஜனாதிபதி  மாளிகையில்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவர் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவர்னர்  ஆலோசனை நடத்தியதாக  கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து