5 மாநில தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க.: மத்திய அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமனம்

BJP 2021 09 08

5 மாநில தேர்தலுக்கு பா.ஜ.க. தயாராகி வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் பலர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான பணிகளில் பா.ஜ.க. மும்முரமாகக் களமிறங்கியுள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களில் பஞ்சாப் தவிர ஏனைய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் அதிகாரத்தைத் தக்கவைக்க பா.ஜ.க. தீவிர முனைப்பு காட்டிவருகிறது. ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் பொறுப்பாளர்களை பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா நியமித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் மத்தியப் பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. பிரசாரத்தை தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் கையாண்டவர் ஆவார்.

தர்மேந்திர பிரதானுடன் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், அர்ஜுன் ராம் மேக்வால், சோபா கரன்தால்ஜே, அன்னபூர்ணா தேவி, மாநிலங்களவை உறுப்பினர்கள் சரோஜ் பாண்டே, விவேக் தாக்கூர், ஹரியாணா முன்னாள் அமைச்சர் கேப்டன் அபிமன்யூ ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்..

உ.பி.யின் ஆறு பகுதிகளுக்கான பொறுப்பாளர்களையும் பா.ஜ.க. நியமித்துள்ளது. சஞ்சய் பாட்டியா (உ.பி. மேற்கு), சஞ்சீவ் சாருசியா (பிரஜ்), ஒய் சத்ய குமார் (அவாத்), சுதிர் குப்தா (கான்பூர்) அரவிந்த் மேனன் (கோரக்பூர்) மற்றும் சுனில் ஓஜா (காஷி) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநில பொறுப்பாளராக நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாவர்.

பஞ்சாப் மாநில பொறுப்பாளராக ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைப் பொறுத்தவரை, மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களால் பா.ஜ.க. பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. அங்கு கட்சியின் செயல் திட்டத்தை வகுக்க உதவியாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, மீனாட்சி லேகி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். பூபேந்திர யாதவ் பொதுச் செயலாளராக கர்நாடகா மற்றும் பிஹார் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களின் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். கட்சி அமைப்பு விஷயங்களில் நன்கு ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

கோவாவில், அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் உடன் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 27.10.2021 இந்த காளை வந்தாலே களம் பதறும், ஜல்லிக்கட்டு காளை கருப்பு | |Kaalai Valarpu Interview | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021
காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...! பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...!
ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து