புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே பிரச்சாரம் செய்யலாம்

pondy assembly-2021-09-08

விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவது உறுதியாகியுள்ளது. அதன்படி தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது.

கொரோனாவால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பாளருடன் ஐவர் மட்டுமே வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யலாம். வென்ற வேட்பாளர் சான்றிதழ் பெறும்போது கைகுலுக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளன. 

புதுச்சேரியில் இதுவரை இருமுறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் வருகிற அக்டோபர் மாதத்துக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, இடஒதுக்கீடு வாரியாக வார்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் இருந்து 4 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பிரச்சாரத்துக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், 

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். ஒரு கொரோனா தொற்றுடையவர் வேட்பாளராக விரும்பினால், அவர் முன்மொழிபவர் மூலம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்களின் முன்னிலையில் தொகுதி வாரியாக மனுக்கள் பரீசிலனை நடைபெறும். அப்போது வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் இருக்க வேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியல் தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ப சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், விதிகளில் குறிப்பிட்டு உள்ளப்படி சின்னங்கள் ஒதுக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர் ஒரே சின்னத்தை தேர்வு செய்திருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.

வேட்பாளர் அதிகபட்சமாக 5 பேருடன் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யலாம். பிரசாரத்தின் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பெரிய குழுக்களாக சென்று பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வேட்பாளர்கள் தொகுதியில் கூட்டங்களை ஏற்பாடு செய்யலாம். 

உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் அதிகளவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியில் இருப்போர் சுகாதாரத்துறை மூலம் வெப்ப அளவு பரிசோதித்தே அனுமதிக்கப்படுவர்.  வெல்லும் வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் தரும் போது கைக்குலுக்க அனுமதி கிடையாது. வென்றோர் ஊர்வலம் செல்லவும், ஆதரவாளர்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 27.10.2021 இந்த காளை வந்தாலே களம் பதறும், ஜல்லிக்கட்டு காளை கருப்பு | |Kaalai Valarpu Interview | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021
காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...! பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...!
ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து