முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஷர்துல் தாக்குர் முன்னேற்றம்

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஓவல் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர், ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முன்னேறியுள்ளார்.

இந்தியா முன்னிலை...

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 5-வது டெஸ்ட், செப்டம்பர் 10 அன்று மான்செஸ்டரில் தொடங்குகிறது.

59 இடங்கள்... 

இந்நிலையில் ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. ஓவல் டெஸ்டில் 57, 60 என இரு அரை சதங்கள் அடித்த இந்தியாவின் ஷர்துல் தாக்குர், பேட்ஸ்மேன் தரவரிசையில் 79-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 59 இடங்கள் முன்னேறியுள்ளார். அதேபோல பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 49-வது இடத்துக்கு ஷர்துல் தாக்குர் முன்னேறியுள்ளார். 

9-வது இடத்தில்...

ஓவல் டெஸ்டில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த பும்ரா, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மா தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார். 

முதலிடத்தில்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

2-ம் இடத்தில்...

ஜூலையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்குப் பின், 2-வது டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்கான போட்டிகள் தொடங்கின. இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா விளையாடி வரும் டெஸ்ட் தொடரும் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் ஒரு அங்கமே. தொடரில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலம் இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் 2,3 மற்றும் 4-ம் இடங்களில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து