முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராலிம்பிக் பேட்மிண்டனில் தங்கம்: பிரமோத்துக்கு ரூ.6 கோடி பரிசை அறிவித்த 'ஒடிஸா'

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

பாராலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கம் வென்றார். 

முதல் இந்தியா்... 

பாராலிம்பிக் போட்டியில் முதல் முறையாக டோக்கியோ பாராலிம்பிக்ஸில் சோ்க்கப்பட்டுள்ள பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை பிரமோத் பெற்றார். 33 வயது பகத், ஒடிஸா மாநிலத்தின் புவனேஸ்வரைச் சேர்ந்தவர். 

போலியோ... 

பிரமோத் பகத் 4 வயதாக இருக்கும்போது போலியோ பாதிப்பு ஏற்பட்டதால் மாற்றுத்திறனாளி ஆனார். அண்டை வீட்டார் பாட்மிண்டன் விளையாடுவதைப் பார்த்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிய பகத், 2006 முதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். சா்வதேச அளவில் இதுவரை 45 பதக்கங்கள் வென்றுள்ளார். இதில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வென்ற ஒரு தங்கம், ஒரு வெண்கலம், 4 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்கள் ஆகியவையும் அடங்கும். 

பரிசுத்தொகை... 

இந்நிலையில் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிரமோத் பகத்துக்கு ரூ. 6 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். குரூப் ஏ அளவிலான அரசுப் பணிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார். பிரமோத் பகத் புவனேஸ்வருக்குத் திரும்பிய பிறகு முதல்வரின் கையால் பரிசுத்தொகை வழங்கப்படும் என ஒடிஸா அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து