உ.பி.யில் 2-ம் தேதி முதல் பிரியங்கா தேர்தல் பிரச்சாரம்

priyanka-2021-09-09

உத்தரபிரதேசத்தில் அக்டோபர் 2-ம் தேதி முதல் பிரியங்கா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற அடிப்படையில் இங்கு எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா நினைக்கிறது.

உத்தரபிரதேசத்தில் ஒரு காலத்தில் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. அதன் பிறகு பிராந்திய கட்சிகள் செல்வாக்கு பெறத்தொடங்கின.  இதன்காரணமாக ஜனதாதளம், சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. இதனால் காங்கிரஸ் கட்சி 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியிடம் காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியால் 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இதன்பின்னர் இரு கட்சிகளின் கூட்டணியும் உடைந்தது. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டபோது சோனியா போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது. ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த மாநிலத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தும் வகையில் பிரியங்காவை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது.

அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருப்பதுடன் உத்தர பிரதேசமாநில மேலிட பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் நீண்டகாலமாக உத்தர பிரதேசத்தில் தனிக்கவனம் செலுத்தி கட்சி பணிகளை செய்து வருகிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளுமே தொடங்கி விட்டன.

மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த ஓவைசி தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த செவ்வாய்க்கிழமை  தனது பிரசாரத்தை தொடங்கினார். பாரதிய ஜனதா ஆரம்ப கட்ட பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் பிரியங்கா வருகிற 2-ம் தேதி முதல் அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு லக்னோவில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படுகிறது. அதில் பிரியங்கா பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சார பணிகளை மேற்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 27.10.2021 இந்த காளை வந்தாலே களம் பதறும், ஜல்லிக்கட்டு காளை கருப்பு | |Kaalai Valarpu Interview | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021
காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...! பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...!
ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து