முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2017-க்கு பிறகு டி-20 அணியில் இடம்: டுவிட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அஸ்வின்!

வியாழக்கிழமை, 9 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன்: 2017-க்கு பிறகு இந்திய டி-20 அணியில் இடம்பெற்றுள்ள 

தமிழக வீரர் அஸ்வின் டுவிட்டிரில் உருக்கமான பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.

இந்திய அணி...

டி-20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி-20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்நிலையில் டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. 

அஸ்வினுக்கு...

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். கடைசியாக ஜூலை 2017-ல் மேற்கிந்தியத் தீவுகளில் டி-20 ஆட்டத்தில் அஸ்வின் விளையாடினார். அதன்பிறகு இந்திய அணி விளையாடிய 63 டி-20 ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை. 

வெளிச்சம் இருக்கும்... 

டி-20 உலகக் கோப்பை அணியில் தேர்வான பிறகு டுவிட்டரில் அஸ்வின் தெரிவித்ததாவது., ஒவ்வொரு சுரங்கப்பாதையின் முடிவிலும் வெளிச்சம் இருக்கும். ஆனால் சுரங்கத்தில் உள்ளவர்களுக்கும் வெளிச்சத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும் மட்டுமே அதைக் காண வாய்ப்பு கிடைக்கும். 

அறை சுவற்றில்...

2017: இந்த வாக்கியத்தை என்னுடைய அறைச் சுவற்றில் எழுதும் முன்பு, என்னுடைய நாட்குறிப்பில் பல லட்சம் முறை எழுதியிருப்பேன். நாம் படித்து வியக்கும் மேற்கோள்களை நாம் உள்வாங்கி அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்போது அவற்றுக்கு அதிக சக்தி உண்டு. மகிழ்ச்சியும் நன்றியும் தான் தற்போது என்னை வெளிப்படுத்துகின்றன என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து