ராம் இயக்கத்தில் நிவின்பாலி

ram

'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் 'மாநாடு' என்கிற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.  இந்நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். இந்த புதிய படத்தை ராம் இயக்குகிறார்.'பிரேமம்' பட புகழ் நடிகர் நிவின்பாலி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா   இசையமைக்கிறார், மக்கள் தொடர்பு ;A.ஜான்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து