பெண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்கும் படம்

Pavatharini

ரூபி பிலிம்ஸ் ஹசீர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஆம். பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை பெண் இயக்குனர், பெண் ஒளிப்பதிவாளர், பெண் இசையமைப்பாளர் என பெண்கள் பணிபுரியும் கூட்டணியை வைத்தே தயாரிக்கிறார்.  அறிமுக இயக்குனர் பாக்யா இயக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைக்கிறார்.  சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணிபுரிந்த சின்னு குருவில்லா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி மற்றும் தற்போது ஜி.வி.பிரகாஷ்-யோகிபாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் என இதுவரை நான்கு படங்களை தயாரித்த ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் ஐந்தவாது படைப்பாக இந்தப்படம் உருவாகிறது. விரைவில் இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து