கோடியில் ஒருவன் - பாடல் வெளியீடு

One-in-a-Million---Song-Rel

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் தற்போது ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதனை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய படத்தின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், கோடியில் ஒருவன் படத்தில் சமூக நீதி குறித்து வலுவாக பேசி இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் சாதியை ஒருவர் தூக்கி பிடிப்பதால் எளிய மக்களின் வாழ்க்கை நசுக்கப்படுகிறது எனவும் ஆதங்கத்துடன் கூறினார். மேலும், “தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி கோடியில் ஒருவன் படம் வெளியாகவுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்சியளிப்பதாக உள்ளது என்றார். முன்னதாக பேசிய விஜய் ஆண்டனி,  தனக்குள்ள பல பிரச்சனைகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். அதன்பின் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு படத்தை இலவசமாக நடித்துக்கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன் என்றார். இந்த விழாவில் விஜய் ஆண்டனியுடன், நடிகை ஆத்மிகா, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா தனஞ்செயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து