சூறாவளியில் சிக்கினேன் - வடிவேலு வேதனை

Vadivel-2021-09-11

லைகா புரடக்‌ஷன் தயாரிப்பில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா சென்னையில் சமீபத்தில்  நடைபெற்றது. 24 ஆம் புலிகேசி படப் பிரச்சனை முடிவடைந்ததை அடுத்து இப்புதிய படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் வடிவேலு, இயக்குனர் சுரா. லைகா தயாரிப்பு நிர்வாகி தமிழ்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வடிவேலு, கொரோனா காலத்தில் எனது காமெடி மக்களுக்கு  சிறந்த மருந்தாக அமைந்தது. ஆனால் நான் பிரச்சனைகள் என்ற சூறாவளியில் சிக்கி தவித்தேன் என்றார். அப்போது எனக்கு புது வாழ்வு கொடுத்தவர் லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரன். அவருக்கு மிகப்பெரிய நன்றிகள் என்றார்.  மேலும், என்றைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாவை சந்தித்தேனோ... அன்றிலிருந்து என்னுடைய வாழ்க்கை பிரைட் ஆகிவிட்டது. இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும் என நம்புகிறேன்.' என்றார்.  கடந்த நான்காண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுளின் ஆசி தான் காரணம். இனி என்னுடைய பயணம் நகைச்சுவை பயணமாக இருக்கும். அனைவரையும் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்த வேண்டும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாகவே நடிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து