ரூ.2500 கோடியில் ஜப்பான் நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள தகவல் தரவு மையம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

CM-3-2021-09-11

NTT Global Data Centres and Cloud Infrastructure நிறுவனத்தால் ரூபாய் 2500  கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள  தகவல் தரவு மையம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து, அம்பத்தூரில் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள  NTT Global Data Centres and Cloud Infrastructure நிறுவனத்தின் தகவல் தரவு மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த தகவல் தரவு மையம் 5.89 ஏக்கர் பரப்பளவில், 8.25 இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. 

NTT Global Data Centres and Cloud Infrastructure நிறுவனம் ஜப்பான் நாட்டினை தலைமையகமாக கொண்டு, 20-க்கும் மேற்பட்ட நாடுகளில், 160 தகவல் தரவு மையங்களை நிறுவியுள்ளது. இந்நிறுவனம், தகவல் தரவு மையங்கள் அமைத்து செயல்படுத்துவதில் உலகளவில் ஒரு முன்னணி நிறுவனமாகும்.  இந்நிறுவனம்  2500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் தகவல் தரவு மையம் மற்றும் கேபிள் இறங்கு தளங்கள் அமைத்திடும். இத்திட்டத்தில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவும் திட்டமும் அடங்கும்.  

 

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி,  NTT Global Data Centres and Cloud Infrastructure நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சரத் சங்கி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும்  NTT Global நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து