கொரோனா: திறந்த ஒரு வாரத்திலேயே பள்ளி, கல்லூரிகளை மூட சிக்கிம் அரசு உத்தரவு

School 2021 09 12

Source: provided

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் மாணவா்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, திறந்த ஒரே வாரத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மாநில அரசு மூடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில அரசு கூறியிருப்பதாவது;-

சிக்கிம் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 6-ம் தேதி திறக்கப்பட்டன. 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் நடைபெற்றன. இதற்கிடையே, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 5 மாணவா்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. 

பள்ளிகளைத் தொடா்ந்து நடத்தினால், கொரோனா தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மாணவா் நலனில் அலட்சியம் காட்ட விரும்பவில்லை. எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளை வரும் அக்டோபா் 31-ம் தேதி வரை மூடுவதற்கு முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து