முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் டிரோன்கள் மூலம் தடுப்பூசி விநியோகம் செய்யும் திட்டம் மத்திய அமைச்சா் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத்: டிரோன்கள் மூலம் தடுப்பூசி, மருந்து பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை முதல் கட்டமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 16 பசுமை மண்டலங்களில் சோதனை முறையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்த புதிய டிரோன் கொள்கைத் திட்டம், டிரோன் இயக்கத்தில் நிலவி வந்த பல்வேறு வகையிலான முரண்பாடுகளை கலைந்துள்ளது.  பசுமை மண்டலங்களில் டிரோன்கள் பறக்கவிட எந்தவித அனுமதியும் பெற வேண்டியது இல்லை. மஞ்சள், சிவப்பு மண்டலங்களில் டிரோன்கள் பறக்கவிட தடை உள்ளது. தெலுங்கானாவில் உள்ள16 பசுமை மண்டலங்களில் வானத்திலிருந்து மருந்துகள் என்ற திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. 

இதில் இருந்து பெறப்படும் தகவல்கள் மூன்று மாதங்களுக்கு சேகரிக்கப்படும். பின்னா் மத்திய சுகாதார அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மாநில அரசு ஆகியவை இந்த தகவல்களை வைத்து ஆய்வு நடத்தி நாடு முழுவதும் இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.  மாநிலங்களின் ஒத்துழைப்புடன் வான்வழி வரைபடம் தயாரிக்கப்பட்டு வானத்திலிருந்து மருந்துகள் திட்டம் அமலாக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!