முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்திற்கான புதிய டி.வி. வரும் 15-ல் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: பாராளுமன்றத்துக்கான புதிய தொலைக்காட்சி சேனல் (சன்சத் டிவி) ஒளிபரப்பை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

மக்களவை டி.வி (லோக்சபா டி.வி) மற்றும் மாநிலங்களவை டி.வி (ராஜ்யசபா டி.வி) ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சன்சத் டி.வி என்ற பெயரில் இனி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். எனினும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் மட்டும் 2 சேனல்களாக இதுசெயல்படும்.

மிக உயரிய கருத்துகள் நிறைந்த அறிவுசார் நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாகும். பல்வேறு மதத்தினரும் பார்க்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் நடத்த உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து