முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேறியது: பா.ஜ.க.தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு

திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு பாரதியஜனதா தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து மசோதா நிறைவேறியது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியாக இருந்தபோதே, தி.மு.க. வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க., ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட் தேர்வு தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது. அக்குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக. 13-ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 14-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அப்போது நீட் தேர்வை ஆரம்பம் முதலே தி.மு.க. அரசு எதிர்த்து வருகிறது. இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அதற்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்படும் என உறுதியளித்தோம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சிறந்த மருத்துவர்களை தமிழகம் உருவாக்கியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதுதான் நியாயமான சேர்க்கையாக இருக்கும் என்றார்.

இதனிடையே, நீட் தேர்வு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே விவாதம் நடைபெற்றது

இருப்பினும் இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. ஆனால் பா.ஜ.க ஆதரவு அளிக்காமல் வெளிநடப்பு செய்தது. இறுதியில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு முதல்வர் கொண்டு வந்த மசோதா நிறைவேறியது. மசோதா நிறைவேற உதவிய அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து