பி.சி.சி.ஐ எப்போதும் பொறுப்புடனே செயல்படும்: தலைவர் கங்குலி உறுதி

Ganguly-2021-09-13

பி.சி.சி.ஐ எப்போதும் பொறுப்புடனே செயல்படும் என்று தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிகுறித்து டிராவிட்டிடம் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்...

இலங்கைக்கு எதிரான இளம் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதையடுத்தே அவர்தான் அடுத்த கோச் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர், இந்திய சீனியர் அணியில் புதிதாக நுழையும் இளைஞர்கள் டிராவிட்டின் பயிற்சிப் பட்டரையில் உருவானவர்கள் என்பதால் தலைமைப் பயிற்சியாளராக அவர் வருவார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

யோசிக்கவில்லை... 

ராகுல் டிராவிட் இந்தியா-ஏ, இந்தியா யு-19 வீரர்களை உருவாக்கி வளர்த்தெடுப்பதில் ராகுல் டிராவிட் தற்போது முதன்மையாகத் திகழ்கிறார், தான் செய்யும் இந்தக் காரியத்தில் தனக்கு முழு திருப்தி இருக்கிறது என்றும் தலைமைப் பயிற்சியாளராக ஆவது பற்றி யோசிக்கவில்லை என்றும் ஏற்கெனவே டிராவிட் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி இது தொடர்பாக கூறும்போது, டிராவிட் இப்போதைக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறினார், ஆனால் இது தொடர்பாக கிரிக்கெட் வாரியமோ தானோ இன்னும் டிராவிட் இடம் மனம் விட்டுப் பேசவில்லை என்று கங்குலி கூறினார்.

ஆர்வம் இல்லை... 

“நிரந்தரமாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு வகிக்க அவருக்கு இப்போதைக்கு ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது. நாங்களும் அவரது விருப்பம் பற்றி குறிப்பாக இது பற்றி எதுவும் அவரிடத்தில் கேட்கவில்லை. அதற்கான நேரம் வரும்போது இது பற்றி முடிவெடுப்போம்” என்றார்.

ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டது குறித்து அவர் தெரிவிக்கையில்.,  டோனியை மென்ட்டாராக நியமிப்பது யாருடைய ஐடியா என்பது தேவையில்லாத விஷயம். இந்தியாவின் வெற்றிதான் உடனடியானது என்றார் கங்குலி.

அதிக அக்கறை...

மேலும் டெஸ்ட் போட்டி ரத்து பற்றி அவர் தெரிவிக்கையில். டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ஏராளமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது இது எளிதானதாக இல்லை. இந்த விவகாரம் சற்று ஆறியவுடன் அடுத்த நடவடிக்கை பற்றி யோசிப்போம். கடைசி டெஸ்ட் போட்டிரத்தானதற்கும் ஐ.பி.எல் தொடருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பொறுப்பற்றமுறையில் பி.சி.சி.ஐ ஒருபோதும் செயல்படாது, மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் நலனிலும் பி.சி.சி.ஐ அதிக அக்கறை வைத்துள்ளது.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து