இந்தியாவில் சற்று குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு

corona-virus 2021 09 14

Source: provided

புது டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 25 ஆயிரத்து 404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் (27,254) பாதிப்பை விட பாதிப்பை விட சற்று குறைவு ஆகும்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 127 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 84 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 339 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது.  நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியே 22 லட்சத்து 38 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78 லட்சத்து 66 ஆயிரத்து 950 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து