அடுத்த ஆண்டு முழுவதும் மக்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் : நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

VK-Paul 2021 09 14

Source: provided

புதுடெல்லி  : அடுத்த ஆண்டு முழுவதும் மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என  நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தடுப்பூசிகள், பலன்தரும் மருந்துகள், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றுடன் அடுத்த ஆண்டும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தால் கொரோனாவில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது என அவர் கூறினார். 

வரிசையாக பண்டிகைகள் வர உள்ள நிலையில் நாடு ஆபத்தான ஒரு கொரோனா காலகட்டத்தை நோக்கி நகர்வதாகவும் டாக்டர் பால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா மேலும் பரவாமல் இருக்க பலன் தர வேண்டிய மருந்துகளின் தேவை மிக முக்கியம்.  3-ம் அலை வீசாது என கூற முடியாது. அடுத்த 3, 4 மாதங்களில் தடுப்பூசி போடுவது அதிகரித்து, சமூக நோய்தடுப்புத் திறனை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து