முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான்செஸ்டர் டெஸ்டுக்குப் பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு பி.சி.சி.ஐ வழங்கும் இரு வாய்ப்புகள்

செவ்வாய்க்கிழமை, 14 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தானதற்குப் பதிலாக அடுத்த வருடம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி கூடுதலாக இரு டி-20 ஆட்டங்கள் அல்லது ஒரு டெஸ்டை விளையாட பி.சி.சி.ஐ சம்மதம் தெரிவித்துள்ளது.

முன்னிலை...

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. 

டெஸ்ட் ரத்து...

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது.

இரு டி-20 போட்டி...

அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. அப்போது ரத்தான 5-வது டெஸ்ட் விளையாடப்படும் என அறியப்பட்டது. இந்நிலையில் ரத்தான டெஸ்டுக்குப் பதிலாகக் கூடுதாக இரு டி20 ஆட்டங்களில் விளையாட பி.சி.சி.ஐ முன்வந்துள்ளது. இதுபற்றி பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது:

இரண்டு வாய்ப்பு...

அடுத்த வருடம் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறபோது கூடுதலாக இரு டி-20 ஆட்டங்களில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளோம். 3 டி-20 ஆட்டங்களுக்குப் பதிலாக 5 டி-20 ஆட்டங்களில் விளையாடலாம். அல்லது ஒரு டெஸ்டில் விளையாடவும் எங்களுக்குச் சம்மதமே. இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பது இங்கிலாந்தின் விருப்பம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து