தேசத்திற்கு செய்து வரும் சேவை தொடரட்டும்: பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து

ramnath-kovind-2021-08-14

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் அவரின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளும் சேவை நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் நாடுமுழுவதும் மக்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை பா.ஜ.க.வினர் வழங்கி வருகிறார்கள். இந்தமுறை இந்த சேவைகளை வழங்குவது 20 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள், உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற உங்களை நான் வாழ்த்துகிறேன், மேலும் ஆத்மார்த்தமான மனப்பான்மையுடன் தேசத்திற்கு தாங்கள் செய்து வரும் சேவை தொடர்ந்து செய்திட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் மோடியின் தனித்துவமான தொலைநோக்கு, முன்மாதிரியான தலைமை, அர்ப்பணிப்பு, சேவை தேசத்தின் சகல வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளன. அவர் நீண்டநாள், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து