முக்கிய செய்திகள்

ஆப்கானில் தலிபான்கள் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்: பாக். பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      உலகம்
Imran-Khan-2021-09-17

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்த தலிபான்கள் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தானை வாடகை துப்பாக்கி போல அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர், முதல் முறையாக சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள இம்ரான் கான், ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்த அந்த அரசை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என கூறினார்.

பெண்களின் உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கிய அரசு ஆகியவற்றில் தாலிபான்களை ஈடுபடுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் இம்ரான் கான் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களுக்கு வெளியிலிருந்து உரிமைகளை பெற்று தர முடியாது என குறிப்பிட்ட இம்ரான் கான், அவர்கள் மிகவும் வலிமையானர்கள் என்பதால், அவர்களின் உரிமைளை அவர்களே பெற்றுக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

பாகிஸ்தானை வாடகை துப்பாக்கி போல அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டதாகவும் இம்ரான் கான் குற்றம்சாட்டினார். பாகிஸ்தானுடனான உறவு மறுபரிசீலனை செய்யப்படும் என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிலின்கனின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், தான் இதுவரை இவ்வளவு அறியாமையை கண்டதில்லை என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து