முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தலிபான்களுக்கு அஞ்சி தலைமறைவாக வாழும் கிரிக்கெட் வீராங்கனைகள்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஆப்கனில் தலிபான்களுக்கு அஞ்சி கிரிக்கெட் வீராங்கனைகள் தலைமறைவாக வாழும் நிலையில் உள்ளனர்.

அதிகாரத்துக்கு வந்ததுமே தலிபான்கள் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளை வலைவீசித் தேடி வந்தனர். ஆப்கானிஸ்தான் பெண்ணாக கிரிக்கெட் விளையாடுவது என்பது விக்கெட்டுகளை எடுப்பது மற்றும் ரன்கள் அடிப்பது ஆகியவற்றையெல்லாம் கடந்தது என்று ஒரு வீராங்கனை தெரிவித்துள்ளார்.

ஆண்கள் அணியைப் போல பெண்கள் அணிக்கு எளிதான பாதை இருக்கவில்லை. ஆப்கானிஸ்தானின் முதல் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி 2010 இல் உருவாக்கப்பட்டது. அப்போதே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. தொடக்க ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெண்கள் அணி பல சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை அனுமதிக்கவில்லை. "தலிபான்களிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருவதாக" அதற்கு காரணம் கூறப்பட்டது.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் இருந்து 50 விளையாட்டு வீராங்கனைகளை ஆஸ்திரேலிய அரசு விமானம் மூலமாக மீட்டது. அதைப் போல தங்களையும் தலிபான்களிடம் இருந்து யாராவது காப்பாற்றுவார்கள் என்று ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியினர் நம்புகின்றனர். தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தலிபான்களால் அவர்கள் வெளிபடையாகவே கொலை மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பெண் கிரிக்கெட்டர்கள் வீட்டிலேயே அஞ்சி ஒழிந்து வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து