திரிணாமுல்லில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்

Babul-Supriyo 2021 09 18

Source: provided

கொல்கத்தா : முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான பாபுல் சுப்ரியோ திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்.

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுல் சுப்ரியோ. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் பதவி வகித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு எம்.பி., பதவியில் தொடர உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் திரிணமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யுமான டெப்ரிக் ஓ பிரையன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.  திரிணமுல் காங்கிரசில் இணைந்த பிறகு பாபுல் சுப்ரியோ கூறியதாவது:-

அரசியலில் இருந்து விலகுவதாக மனப்பூர்வமாக அறிவித்தேன். ஆனால், என் முன் பல வாய்ப்புகள் இருந்ததை உணர்ந்ததால், திரிணாமுல்லில் இணைந்தேன். அரசியலில் இருந்து விலகுவது தவறு என நண்பர்கள் தெரிவித்தனர். எனது முடிவை மாற்றிக் கொண்டது பெருமை அளிக்கிறது. மேற்கு வங்கத்திற்கு சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மம்தாவை திங்கட்கிழமை சந்திக்க உள்ளேன். எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து