முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல்: கமல் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக  டார்ச்லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து