டெல்டா, கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

Radhakrishnan 2021 07 03

Source: provided

சென்னை: டெல்டா, கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் சற்று அதிகரித்திருத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளது.  குறிப்பாக தஞ்சாவூர், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், சென்னையில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், அண்ணாநகர், திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த பகுதிகளில் முதல்வரின்  உத்தரவுப்படி நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து