முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தி.மு.க. அரசு தொடர்ந்து முயற்சி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு: நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தி.மு.க. அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஈரோட்டில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் நண்பகல் 12 மணியளவில் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் விகிதம் 56 சதவீதமாக உள்ளது.  நீட் தேர்வு ரத்து செய்வதற்கு தி.மு.க. அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.முதல்வர் முக ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே தற்கொலை ஒரு தீர்வல்ல, வாழ்ந்து காட்டுங்கள் என்பதை மாணவர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டிருக்கிறார்.

மிகச் சிறந்த சட்ட ரீதியான முன்வடிவு ஒன்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஜனாதிபதியிடம் சென்ற பிறகு சட்டமுடிவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக நடவடிக்கையை முதல்வர்  மேற்கொள்வார். அதற்குள் மாணவர்கள் அவசரப்பட்டு தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம். 

நீட் தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மனநல மருத்துவர்கள் கொண்டு ஆலோசனைகளை வழங்கும் பணியை தொடங்கி இருக்கிறோம். இன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து