முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு சலுகை: அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : நவம்பர் தொடங்கி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு கெடுபிடிகளில் தளர்வு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் கோவிட் 19 நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியன்ட்ஸ் இது பற்றி கூறியபோது நவம்பர் மாதம் தொடங்கி வெளிநாட்டுப் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் போதும் அமெரிக்காவுக்கு அதிக கெடுபிடிகள் இல்லாமல் வரலாம்.

ஆனால், அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டு முடிவு நெகட்டிவ் என இருந்தால் தடையின்றி பயணிக்கலாம். விமானப் பயணத்திற்கு முன்னதாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பயணிகளின் தொலைபேசி எண், இ மெயில் முகவரி ஆகியனவற்றை சேகரித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் 30 நாட்கள் வரை தங்கள் விமானத்தில் பயணித்த பயணிகளைக் கண்காணிக்குமாறு அமெரிக்காவின் தொற்று நோய்ப் பரவல் தடுப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பரவ ஆரம்பித்த சூழலில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்தது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து