முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் குட்டையில் மூழ்கியதில் பிரபல நடிகை காதலனுடன் பலி

புதன்கிழமை, 22 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கோவா :   பிரபல நடிகையும் அவரது காதலனும் சென்ற கார் குட்டையில் மூழ்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தி  திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே. நடிகை ஈஸ்வரி, தனது காதலர் சுபம் தாட்கேவுடன்   ஓய்வு நாட்களை கழிப்பதற்காக காரிலேயே கோவா சென்றுள்ளனர்.

அங்கு சில நாட்கள் தங்கி விட்டு, கடந்த திங்களன்று மும்பை திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா என்ற பகுதியில் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது  கட்டுப்பாட்டை இழந்த கார்  சாலையோர குட்டையில் விழுந்தது.  அந்த குட்டையில் அதிக அளவு தண்ணீர் இருந்ததால், காருக்குள் இருந்த நடிகை ஈஸ்வரி மற்றும் காதலன் இருவரும் வெளிவர முடியாமல் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். 

சுபத்திற்கும், ஈஸ்வரிக்கும் அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  ஈஸ்வரி நடித்திருக்கும் இரண்டு படங்களும் இன்னும் ரிலீஸாகவில்லை.  விபத்து குறித்து கோவா போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது,

காரை சுபம் ஓட்டிச் சென்றிருக்கிறார். கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. காலை 7 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரையும், இரண்டு சடலங்களையும் மீட்டனர் என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து