முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது இங்கிலாந்து

புதன்கிழமை, 22 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூப் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இந்த தடுப்பூசியை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தவை. காப்புரிமை இங்கிலாந்து நிறுவனத்திடம் உள்ளது.

ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் பிரிட்டனில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என  இங்கிலாந்து  அரசு கட்டாயப்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. 

இதன் மூலம் , இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இங்கிலாந்தில் தாங்கள் செல்ல இருக்கும் இடம் பற்றிய விவரங்களையும் வெளிப்படுத்த வேண்டியது இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து