முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுந்தூர விமான பயணத்தின் போதும் கோப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது நீண்ட விமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்டார். 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.  வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டு விமான தளத்திற்கு சென்றடைந்த அவருக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். 

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில், வாஷிங்டனில் உற்சாகமான வரவேற்பு அளித்த இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புலம்பெயர் இந்தியர்களே நமது பலம். உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் மேம்பட்டிருப்பது பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது நீண்ட விமானப் பயணத்தின் போதும், முக்கியக் கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திடுவது, முக்கிய திட்டங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்வது உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இது குறித்த புகைப்படமும் அவரது டுவிட்டர் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து