முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

குவாட் மாநாடு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்துள்ளார். அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று மாலை 7 மணிக்கு வாஷிங்டனில் உலகளாவிய மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் குவால்காம் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியானோ, அடோப் நிர்வாகி சாந்தனு நாராயண், பர்ஸ்ட் சோலார் நிர்வாகி மார்க் விட்மர், ஜெனரல் ஆட்மோமிக்ஸ் அதிகாரி விவேக் லால் மற்றும் பிளாக்ஸ்டோனில் தலைமை நிர்வாக அதிகாரி டீபன் ஏ ஸ்வார்ஸ்மேன் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். இதில் சாந்தனு நாராயண் மற்றும் விவேக் லால் இந்திய அமெரிக்கர்கள் ஆவார்.

பிரதமர் மோடி இரண்டாவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி கடந்த வாரம் ஏற்கெனவே ஸ்காட் மோரிசனுடன் தொலைபேசியில் பேசினார். இதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த ஆண்டு மார்ச் 12 அன்று, பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ஆகியோரும் காணொலி வாயிலாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோபைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தேர்வானதற்கு பிறகு பிரதமர் மோடி இதுவரை ஜோபைடன், கமலா ஹாரிசை சந்திக்கவில்லை.

 

நேற்று அவர்களை சந்தித்து பேசினார். முன்னதாக அவர் வாஷிங்டன் விமான நிலையத்தில் இறங்கியபோது அமெரிக்க அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அமெரிக்க வாழ் இந்தியர்களும் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களுடன் கைகுலுக்கி பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார். விமானத்தில் அமெரிக்கா சென்ற போது தனது நேரத்தை வீணடிக்காமல் பிரதமர் மோடி கோப்புகளை பார்த்தபடியே சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து