முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆறாம் நிலம் - விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ஐபிசி தமிழ் தயாரிப்பில் அனந்த ரமணன் இயக்கியிருக்கும் முழு நீள ஈழத் தமிழ் திரைப்படம் ‘ஆறாம் நிலம்’. சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை தேடும் மனைவி,

அப்பா எப்போது வருவார்  என்ற கேள்வியுடன் காத்திருக்கும் மகள். இந்த இரண்டு கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ் ஈழ மக்களின் இதய வலியை நமக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் அனந்த ரமணன்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு, ஈழத்தமிழர்களை பல்வேறு வசதிகளோடு நன்றாக கவனித்துக் கொள்வதாகவும், அவர்களுக்கு வேலை வாய்பினை வழங்கி வருவதாகவும் சிங்கள அரசு கூறுகிறது. ஆனால்,  போரில் பதுக்கி வைக்கப்பட்ட கன்னி வெடிகளை எடுப்பது தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி, இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். கன்னிவெடிகளை தேடும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சிவ சாந்தகுமார் அனைவரையும் சீட்டின் நுனியில் அமர வைத்துவிடுகிறார். பின்னனி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி கதையோடு பயணம் செய்ய வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து