முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோகி பாபு நடிக்கும் கான்ட்ராக்டர் நேசமணி

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

அன்கா புரொடக்‌ஷன்ஸ் முதல் தயாரிப்பில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் உருவாகும் 'கான்ட்ராக்டர் நேசமணி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது.  படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் வடிவேலு நடித்ததால் பிரபலமானது. அதேவேளையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் இந்தப் பெயர் அடிபட,  PrayforNesamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு உலகளவில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ட்ரெண்டானது.

இப்போது இந்த பெயரில் இப் படத்தை ஸ்வாதீஷ் எம்.எஸ். இயக்க, அன்கா மீடியா சார்பில் ‘வால்டர்’ யு.அன்பு, மற்றும் கார்த்தி கே தில்லை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து