முக்கிய செய்திகள்

அஸ்வின் புதிய சாதனை

Ipl-team

Source: provided

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 

இந்த ஆட்டத்தில் பவர் பிளேவின் 5-வது ஓவரை அஸ்வின் வீசினார். இதில் டேவிட் மில்லர் விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் அசத்தினார்.  இதன்மூலம் டி-20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார்.

_____________

இந்தியாவுக்கு இரு வெள்ளி

அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் விளையாட்டில் மகளிர் அணி, கலப்பு அணி ஆகிய இரு பிரிவுகளில் இந்தியா 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

இரு பிரிவுகளின் இறுதிச்சுற்றிலுமே இந்தியாவிடம் இருந்து கொலம்பியா தங்கத்தை தட்டிப் பறித்தது. காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ ஜோதி சுரேகா இணை - கொலம்பியாவின் டேனியல் முனோஸ்/சாரா லோபஸ் ஜோடியை சந்தித்தது. அதில் கொலம்பியா 154 - 150 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. 

___________

சாம்சனுக்கு மீண்டும் அபராதம்

ஐ.பி.எல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடைய நடந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பந்துவீசுவதற்குக் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் தாண்டி ராஜஸ்தான் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் தொடந்து 2-வது முறையாக இதே தவறைச் செய்ததால் சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் மற்ற வீரர்களுக்குக் குறைந்தபட்சம் தலா ரூ. 6 லட்சம் அல்லது தனிநபர் ஆட்டக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலும் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

_____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து