முக்கிய செய்திகள்

டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் 'விராட் கோலி'

திங்கட்கிழமை, 27 செப்டம்பர் 2021      விளையாட்டு
Virat-kholi

Source: provided

துபாய்: டி-20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. மேலும், 5-வது சர்வதேச வீரர் விராட் கோலி ஆவார்.

பெங்களூரு வெற்றி...

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 39-வது லீக் போட்டியில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. இந்த போட்டியில் தான் அவர் அந்த சாதனையை படைத்தார்.

51 ரன்கள்...

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூர் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. மும்பை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 51 ரன் விளாசினார்.

முதல் இந்திய வீரர்...

இவர் தனது 13-வது ரன்னை கடந்த போது டி-20 அரங்கில் 10 ஆயிரம் ரன்னை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும், 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது சர்வதேச வீரரானார். இதுவரை 314 போட்டியில் 5 சதம், 74 அரைசதம் உள்பட 10,038 ரன்கள் எடுத்துள்ளார்.

கிறிஸ் கெய்ல்...

ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (14,275 ரன்), பொல்லார்டு (11,195 ரன்), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10,808 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10,019 ரன்) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

முக்கிய மைல்கல்கள்... 

1) சர்வதேச டி-20 போட்டிகள், உள்நாட்டு டி-20 போட்டிகள் மற்றும் ஐ.பி.எல் போட்டிகள் என அனைத்து வகையான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி 10,000 ரன்களைக் கடந்துள்ளார்.

2) சென்ற வாரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய போட்டியில் பங்கேற்றதன் மூலம் 200வது ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றிருந்தார் விராட் கோலி. ஆனால், அந்தப் போட்டியில் ஆர்.சி.பி மோசமாகத் தோற்றது.

3) ஐ.பி.எல் 2021 போட்டித் தொடரின் இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட்கோலி ஞாயிறன்று நடந்த போட்டியில் களம் இறங்கிய பொழுது 10,000 ரன்களை எட்ட அவருக்கு 13 ரன்களே தேவைப்பட்டிருந்தது.

4) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தேவ்தத் படிக்கல் உடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி 16வது ரன்னை எட்டிய பொழுது 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் கோலி.

5) சர்வதேச அளவில் இதுவரை நான்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே டி-20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தனர். தற்பொழுது ஐந்தாவது வீரர் ஆக்கியுள்ளார் விராட் கோலி.

6) கிறிஸ் கெய்ல் (14,275), பொல்லார்டு (11,195), ஷோயப் மாலிக் (10,808), டேவிட் வார்னர் (10,019) ஆகிய நால்வரும் முன்னதாக அனைத்து வகையான டி-20 போட்டிகளிலும் 10,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து