முக்கிய செய்திகள்

ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேலுக்கு விராட் கோலி பாராட்டு

Harshad-patel

Source: provided

துபாய்: துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் 39-வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமை ஆர்சிபி அணி ரோகித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.

ஹாட்ரிக் சாதனை... 

கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 8 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அட்டவணையில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. நேற்று ஆர்சிபி பவுலர் ஹர்ஷல் படேல் 17வது ஓவரில் ஹர்திக் பாண்டியா, போலார்டு, சாகர் ஆகியோர் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 57/0 லிருந்து மும்பை இந்தியன்ஸ் அடுத்த 54 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வி கண்டது.

பும்ராவுக்கு பாராட்டு...

இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறும்போது பும்ராவை பாராட்டினார். படிக்கல், மேக்ஸ்வெல், ஏ.பி.டிவிலியர்ஸ் என்று மூன்று முக்கிய விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார். விராட் கோலி கூறியதாவது: “மிக்க மகிழ்ச்சி, குறிப்பாக வெற்றி பெற்ற விதம் அபாரம். தேவ்தத்தை இழந்தது கடினமாகிப்போனது. 2வது ஓவரில் வந்து பும்ரா என்னை அவுட் ஆக்கப் பார்த்தார். கே.எஸ். பரத் இறங்கி சில அபாரமான ஷாட்களை ஆடினார். அவர் எனக்கிருந்த பிரஷரை நீக்கி விட்டார். மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் நம்ப முடியாத இன்னிங்ஸ்.

காலி செய்து விடுவார்... 

நாம் நம் ஆதிக்க மனோபாவத்தை காட்டவில்லை எனில் பும்ரா நம்மை ஏறி மிதித்து விடுவார், கொஞ்சம் விட்டால் நம்மை காலி செய்து விடுவார் பும்ரா. அவர் அப்படிப்பட்ட பவுலர். எனவே நாம் அவருக்கு எதிராக சிறப்பாக ஆடுவது அவசியம். 15 ரன்களைக் கூடுதலாகப் பெற்றிருக்க வேண்டும் விட்டு விட்டோம். ஹர்ஷல் படேல் பவுலிங் நம்ப முடியாதது, அசத்தி விட்டார்” என்றார் விராட் கோலி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து