முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் பந்துகளை கணிக்க முடியாது; ஆர்.சி.பி ஹர்ஷல் படேல் சவால்

திங்கட்கிழமை, 27 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: என் பந்துகளை கணிக்க முடியாது என்று மும்பைக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்களை கைபற்றிய ஆர்.சி.பியின் ஹர்ஷல் படேல் சவால் விடுத்துள்ளார்.

ஹாட்ரிக் சாதனை... 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் சாதனை புரிந்த ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல், தன் ஸ்லோயர் பந்துகளை பேட்ஸ்மென்களே கண்டுப்பிடிக்க முடியவில்லை எனில் பவுலர் எப்படிக் கண்டுப்பிடிப்பார் என்று கேட்டுள்ளார்.

வெறும் 17 ரன்கள்...

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, போலார்டு, ராகுல் சாகர் ஆகியோரை 17வது ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தினார் ஹர்ஷல் படேல், அவர் 3.1 ஓவர் வீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் ஹாட்ரிக் பந்தை வீசியது எப்படி என்று ஹர்ஷல் படேல், திட்டமிட்டது உட்பட விளக்கினார். அதில்தான் ஸ்லோ பந்துகளை பேட்டர்களே கணிக்க முடியாத போது பவுலர்கள் எப்படி கணிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஸ்லோயர் பந்துகள்... 

“பேட்ஸ்மென்களே என் ஸ்லோயர் பந்துகளை சரிவர கணிக்க முடியாத போது டெய்ல் எண்டர்கள் எப்படி கணிக்க முடியும்? அதனால்தான் ராகுல் சாகர் ஹாட்ரிக் விக்கெட் பந்து அப்படிப் போடப்பட்டது. இதை நான் சவாலாகவே தெரிவிக்கிறேன். 6வது முறையாக நான் ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றேன், இந்த முறைதான் ஹாட்ரிக் சாதனை செய்ய முடிந்தது.

ஏமாற்ற முடியும்... 

போலார்டுக்கு அவர் அடிக்க முடியக்கூடிய இடத்தில் வீசினால் சேதம் ஏற்படுத்துவார். அவருக்கு வைடாக வீசுவது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம். அப்போது அவரை ஏமாற்ற முடியும். அது உண்மையில் நன்றாகவே வந்தது என்றார் ஹர்ஷல் படேல். ஹர்ஷல் படேல் இப்போது அதிக விக்கெட்டுகளுக்கான பர்ப்பிள் கேப்புக்குச் சொந்தக்காரர்.

3-வது வீரர்...

ஐ.பி.எல் வரலாற்றில் 3-வது ஆர்சிபி வீரர் ஹாட்ரிக் சாதனை புரிந்திருக்கிறார், முதலில் பிரவீன் குமார் 2010-ல் ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் 2017-ல் இதே மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக மே.இ.தீவுகள் பவுலர் சாமுயெல் பத்ரி ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளானர். தற்போது 3-வது ஆர்.சி.பி வீரர் ஹர்ஷல் படேல் சாதித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து