முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் : மருத்துவ உதவிகளை அரசு அளிக்கும் என உறுதி

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஜனனியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவரது தாயாருக்கு ஆறுதல் கூறி, அவரது மகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு அளிக்கும் என உறுதியளித்தார். 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஜனனி. சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்ட சிறுமிக்கு, தாய் ராஜ நந்தினி தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். ஆனால், சில நாட்களில் அந்த சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. மேலும், கல்லீரலும் பாதிக்கப்பட்டது. தனது மகளின் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு தலைமைச் செயலகத்தில் ராஜ நந்தினி மனு கொடுத்திருந்தார். அத்துடன் தங்களுக்கு உதவி செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்து தாயும், மகளும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிறுமி மற்றும் தாயாரிடம் பேசியமுதல்வர், அவர்களுக்கு ஆறுதல்தெரிவித்து உதவி செய்யப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, சிறுமி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், சிறுமிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போது, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மருத்துவமனை டீன் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து