முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு - காஷ்மீரில் பாக். தீவிரவாதி சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

ஜம்மு-காஷ்மீர் காஷ்மீரில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டான். மேலும் ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிப்பட்டான்.

காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் நேற்று பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் மற்றொரு தீவிரவாதியை உயிருடன் பிடித்தனர். கடந்த செப்-18-ம் தேதி பாகிஸ்தானிலிருந்து உரி பகுதியில் ஊடுருவியத் தீவிரவாதிகளை சில நாட்களாக ராணுவத்தினர் தேடி வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று உரி பகுதியில் 2 பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். பின் இருதரப்பிற்கும் ஏற்பட்ட தாக்குதலில் ராணுவத்தினர் ஒரு தீவிரவாதியை சுட்டுகொன்றனர். மற்றொரு தீவிரவாதியை உயிருடன் பிடித்திருக்கிறார்கள். இத்தாக்குதலில் 4 ராணுவ வீரர்களும் குண்டடிபட்டு   காயம் அடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து