முக்கிய செய்திகள்

இனி வரும் போட்டிகளில் வார்னர் பார்வையாளராகவே இருப்பார்: சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் பேட்டி

Hydrabad-Trainer 2021 09 28

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இந்த சீசனில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு இனிமேல் களமிறங்க வாய்ப்புக் கிடைக்காது என பயிற்சியாளர் ட்ரீவோர் பேலிஸ் சூசகமாகத் தெரிவித்தார்.

துபாயில் நடந்த ஐ.பி.எல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வாய்ப்பளிக்க... 

சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாள்ர ட்ரிவோர் பேலிஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது.,  இந்த ஐ.பி.எல் சீசனுக்கு எப்படியும் சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாது என்பது தெரிந்துவிட்டது. ஆதலால், சன்ரைசர்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்கள், இதுவரை வாய்ப்புக் கிடைக்காத வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமரவைப்போம்...

 

அடுத்துவரும் சில நாட்களில் 18 வீரர்களைக் கொண்ட அணியைத் தேர்வு செய்தபின் அனுபவ வீரர்களை அமரவைப்போம். அதற்கான வேலையில் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை அடுத்துவரும் போட்டிகளில் வார்னர் பார்வையாளரகவே தொடர்ந்து, இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவார். இது அனுபவ வீரர்களுக்கும் பொருந்தும். மிகப்பெரிய ஏலம் நடப்பதற்கு முன் இதுதான் கடைசி சீசன். வார்னரைப் பொறுத்தவரை சன்ரைசர்ஸ் அணிக்கு ஏராளமான பங்களிப்புச் செய்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் அதிகமான ரன்களையும் அடித்துள்ளார். இவ்வாறு பேலிசிஸ் தெரிவி்த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து