முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் தொடரின் 2-ம் பகுதியில் மும்பை அணிக்கு முதல் வெற்றி : பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி : நடப்பு ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றியை ருசித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. பஞ்சாப் கிங்ஸை வென்றுள்ள மும்பை அணி இதன் மூலம் ப்ளே-ஆஃப் கனவை தக்க வைத்துள்ளது.

தொடர் தோல்வி...

அபு தாபியில் நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ். இதற்கு முன்பு அந்த அணி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியையே சந்தித்திருந்தது. பஞ்சாபுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்திருந்தால் மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கி இருக்கும்.

மும்பை பவுளிங்...

ஆனால் இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான நம்பிக்கையை தங்கள் ரசிகர்கள் இழக்க வேண்டாம் என்று உணர்த்தியுள்ளனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர். டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் முறையே 21 மற்றும் 15 ரன்களை எடுத்தனர்.

135 ரன்கள்...

அடுத்ததாக வந்த கிறிஸ் கெயில் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஸ்கோர் எடுத்தவர் 42 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 135 ரன்கள் எடுத்திருந்தது. மும்பை அணிக்காக பும்ரா மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மும்பை வெற்றி...

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உதவிகரமாக இருந்தனர். சௌரப் திவாரி 37 பந்துகளில் 45 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து இருந்தனர். 19-வது ஓவரின் இறுதியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றுள்ளது. இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளது.

5-ம் இடத்தில்...

தற்போதைய நிலவரப்படி தான் விளையாடிய 11 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றியும் ஆறில் தோல்வியும் அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. நான்காம் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 10 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட அதிகமாக உள்ளது. எனவே 

6-ம் இடத்தில்...

டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்த பஞ்சாப் அணி, முன்பு விளையாடிய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது. மும்பைக்கு எதிரராக மீண்டும் தோற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ். இப்போது அந்த அணி 11 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

அதிக ரன்களுடன்....

மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்ல தனது இடத்தை உறுதி செய்ய வேண்டுமானால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டுமல்லாது, அதிக ரன்கள் எடுத்து வெல்ல வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து